search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச வழக்கு"

    • டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங்.
    • லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர்.

    குருகிராம்:

    டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.

    இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை அதிகரித்து ரூ.1 கோடியே 11 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக டெல்லி ரஞ்சித் நகரை சேர்ந்த லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார்.
    • விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவர் வண்டல்மணல் அள்ளுவதற்காக கடந்த 2019 ஜூன் மாதம் செஞ்சி தாசில்தார் ஆதிமூலம் என்பவரை அணுகினார். அப்போது தாசில்தார் ஆதிமூலம், விவசாயி வடிவேலுவிடம் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த விவசாயி வடிவேல் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதனடிப்படையில் தாசில்தார் ஆதிமூலம் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார். இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த அண்ணாதுரை, தாசில்தார் ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்தார்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் சாட்சியாக தற்போது வேளாண்துறை இயக்குனராக இருக்கும் முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    ×